cropped-logo-150x150-copy.png
0%

Latest Posts

கவிதைகள்

இலை

தினமும் அவனை  பார்க்கிறேன்  சிறுவன்தான்  கல்லூரி உணவகத்தில்  கையாள் உத்தியோகம்  தள்ளு வண்டியை  இழுத்தபடி மிச்ச இலைகளை  சேகரித்து கைகளைக் கட்டி  மௌனமாய் நிற்பான்..  அவன் உடைகளில்  பிரபஞ்சம் கிழித்து  வைத்திருக்கும் குடுப்பத்தின்...

கவிதைகள்

மஞ்சுளா கவிதைகள்

1- சந்தேகிக்க முடியாத இரண்டு ரகசியங்கள் ஜன்னல் வழியாக பூனையைப் போல் உள் நுழைகிறது வெளிச்சம் அதே ஜன்னல் வழியாக எலியைப் போல் வெளியேறுகிறது இருட்டு ஒரே அறையில் அவையிரண்டும் சந்தித்ததில்லை என்னால் சந்தேகிக்க முடியாத இந்த இரண்டு...

கவிதைகள்

ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்

1. அருட்பெருஞ்சோதி கண்ணாடிக் குடுவைக்குள் ஏற்றி வைத்த தீபத்திடம் காணக் கிடைப்பதில்லை காற்றின் பாடலுக்கு அபிநயம் பிடிக்கும் சுடரின் திருநடனங்கள் அவள் ஏற்றி வைத்த தீபத்தின் சுடர் ஒன்று தீயின் நாவோடு காற்றின் எச்சில் பட்டு என்னிடம்...

கவிதைகள்

அர்ஜூன்ராச் கவிதைகள்

ஒரு ஊரில் ஒரு தகப்பன் , ஒரு குட்டி பையன். வீட்டு மரமொன்று இலைகள் விட ஆரம்பித்தது. அதன் சுதந்திர நோக்கம் கருதி எல்லா இலைகளுக்கும் பறவை என்றே பெயர் வைத்தார் அப்பா. அவரை நகைத்தபடி பறந்து பறந்தவை போய்க்கொண்டிருந்தன ...

கவிதைகள்

ச்ஜேஸூ கவிதைகள்

அமாவாசை சூரியனில் முருங்கை மர காகத்தின் உண்ணாவிரதம் மகனுக்கு உணர்த்தியது இறந்த காலத்தில் மருமகளின் பாராமுகத்தை! என் வீட்டு புளிய மரமும் போதி மரமானது நான் புத்தனானதால்!  

கவிதைகள்

ஞாயமற்ற ஞான மரம்

எத்தனை எத்தனை பறவைகள் கூடுகட்டி மகிழ்ந்திருக்க பேரன்போடு கிளை கொடுத்தது.. சித்தார்த்தனெனும் ஒற்றை பேரின்பக்கூட்டை மட்டும் பிரித்து… புத்தருக்கு போதனையும் யசோதரைக்கு பாதகமும் செய்து.. எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது...

இதழ் 7 • கவிதைகள்

தாமதமாக வந்த அன்னப் பறவை

என் முன் தெரிகிறது ஒரு போலி வானம் ஒரு போலி நிலவு சில போலி நட்சத்திரங்கள் ஒரு போலி உலகு அவ்வளவு அழகு அத்தனையும் உண்மை போலவே. அன்னம் வந்து அத்தனையும் உறிஞ்சித் துப்பும் போதும் அத்தனை அழகு பொய்யைப் போலவே.

கவிதைகள்

குதிரைக்காரி

சிவப்பு,  மஞ்சள், பளுப்பு என எதுவும் நிறுத்தாது அவளை வடிவற்ற எந்த வடிவிலும் எந்த தளத்திலும் எப்படியேனும்  ஒரு குதிரையை வரைந்து உயிரோடு கொணர்ந்திடும் சாகசக்கார தோழி அவள் பிடரி மயிர் சிலிர்க்க கால் தசைகள் அதிர ஓடியபடியே இருக்கும்...

கவிதைகள்

இறகு

மாலை நேர சூரியன் மேற்கில் மறையும் வேளை வானின் உயரத்தில் கூட்டமாய் பறக்கும் பறவையொன்றிலிருந்து இறகொன்று உதிர்ந்து கண்ணாடி தொட்டிக்குள் நீந்தும் வண்ணமீனைப்போல கிழக்கும் மேற்குமாய் அசைந்து சில நொடி பயணத்தில் பள்ளியிலிருந்து வீடு...

கவிதைகள்

மனம் பிறழ்ந்தவள்

வெகு நிதானமாக மழை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருக்கிறேன் மனம் பிறழ்ந்த அவளை அவள் கண்களில் வடியும் இளஞ்சூடான கண்ணீரில் உதிர்வது பழைய ஞாபகங்களின் பரவச இயக்கம் கிளைகள் ஒடிய மரங்கள் அசைகிற நாளில் மலை ஆடென மலைச்சரிவின் விளிம்பு...

You cannot copy content of this Website